விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கிலிருந்து விஜயகலா விடுதலை

Colombo Liberation Tigers of Tamil Eelam
By Vanan Oct 19, 2023 06:28 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில், அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு இன்று(19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்தா

2018ஆண்டு ஆடி மாதம் 2ஆம் திகதி யாழப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்ற அதிபரின் மக்கள் சேவைத் திட்டத்தின் எட்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போதைய பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழ வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டாரெனவும் அக்கருத்தானது அரசியலமைப்பின் 06ஆவது பிரிவின் திருத்தம், 1978ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தண்டணைச் சட்டக்கோவை 120ஆம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றமாகும் என கொழும்பு குற்றப்புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதி நீதிமன்றில் முதல் அறிக்கை தாக்கல் செய்தனர்.

விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கிலிருந்து விஜயகலா விடுதலை | Ltte Statement Vijayakala Maheswaran Released Case

இச்சம்பவம் தொடர்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சார்பில் முன்னிலையாகிய அதிபர் சட்டத்தரணி கே.வி தவராசா தனது சமர்ப்பணத்தில், விஜயகலா மகேஸ்வரன் அதிபரின் மக்கள் சேவைத் திட்டத்தின் எட்டாவது நிகழ்ச்சியில் அரச அமைச்சர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்வில் உரையாற்றுகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாகப் பெண்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள் குறித்து அவர் அச்சத்தையும் ஆத்திரத்தையும் உணர்ச்சி மேலிடக் குறிப்பிட்டுப் பேசினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற துஸ்பிரயோகங்கள் இடம்பெறவில்லை. அப்படி நடைபெற்றால் அதற்கான தண்டனைகள் பாரதூரமாக இருந்தன.

நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அத்தகைய நிர்வாகம் ஒன்றினை தற்போது நாம் ஏற்படுத்த வேண்டும் என்று கருதியதாகவே அவரது கருத்து அமைந்திருந்ததேயன்றி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றவில்லை என்ற சமர்ப்பணத்தையடுத்து 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி விஜயகலா மகேஸ்வரனை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது.

நாடாளுமன்றத்தில் அமளிதுமளி : சபை அமர்வுகளிலிருந்து இடைநிறுத்தப்பட்ட எதிரணி எம்.பி

நாடாளுமன்றத்தில் அமளிதுமளி : சபை அமர்வுகளிலிருந்து இடைநிறுத்தப்பட்ட எதிரணி எம்.பி

சட்டத்தரணிகளின் சமர்ப்பணம்

இன்று (19) வழக்கு நீதிமன்றில் மேலதிக விசாரணைக்காக அழைக்கப்பட்ட போது குற்றப்புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் நீதிமன்றில் தமது சமர்ப்பணத்தில் 1978ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழோ விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய உத்தேசிக்கவில்லையென சட்டமா அதிபர் திணைக்களம் தங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்தனர்.

விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கிலிருந்து விஜயகலா விடுதலை | Ltte Statement Vijayakala Maheswaran Released Case

இதயடுத்து விஜயகலா மகேஸ்வரன் சார்பில் முன்னிலையாகிய அதிபர் சட்டத்தரணி கே.வி தவராசா விஜயகலா மகேஸ்வரனை விடுதலை செய்யுமாறு நீதிமன்றினை கேட்டுக் கொண்டதை அடுத்து முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் அனுசரனையில் சிரேஸ்ட சட்டத்தரணி காமினி திசாநாயக்க அதிபர் சட்டத்தரணி கேவி தவராசா, ஆகியோர் இவ்வழக்கில் முன்னிலையாகினர்.

ரணிலின் கையொப்பத்துடன் வெளியான மற்றுமொரு வர்த்தமானி

ரணிலின் கையொப்பத்துடன் வெளியான மற்றுமொரு வர்த்தமானி

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024