அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக அப்படி கூறவேண்டாம் - சுமந்திரனுக்கு பதிலடி

srilanka m-a-sumanthiran
By Vasanth Apr 04, 2021 08:01 AM GMT
Report

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என கூறாதீர்கள் என சுமந்திரனுக்கு சிவாஜிலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார்.

இனப்படுகொலை நடைபெற்றதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்றையதினம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இனப்படுகொலை என்பது நேற்று இன்று நடந்தது இல்லை இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற ஒரு விடயம். வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்லாது மாகாண சபையில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடு இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனப்படுகொலை என்பது இன்று நேற்றல்ல 1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கு பல்வேறுபட்ட ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

தந்தை செல்வா- பண்டா ஒப்பந்தத்தில் கூட எதிர்காலத்தில் சிங்கள குடியேற்றங்கள் நடத்தப்படாமல் இருக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1965ம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற ஒப்பந்தத்தில் கூட இனப்படுகொலை நடந்தது தொடர்பான விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரின் வாழ்வியல் என குறிப்பிடப்பட்டுள்ளது. சுமந்திரன் இனப்படுகொலை நடக்கவில்லை என கூறுவது ஐனாதிபதி சட்டத்தரணியாக இருக்கும் அவருக்கு விளங்கவில்லையா? நான் அவருக்கு இனப்படுகொலை விடயம் தொடர்பில் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை 1983 ல் இனத்தினை அழிக்கும் எண்ணத்தோடு இனத்தை அழிக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

எனவே இனப்படுகொலை என்பது ஒருஇனத்தை தெரிவு செய்து படுகொலை செய்ய நினைப்பது என்பதை நிரூபிக்க முடியும் .உலகில் எத்தனை நாடுகளில் இனப்படுகொலை நடைபெற்றமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என மறைக்காதீர்கள்.

எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

உங்களால் முடியாவிட்டால் ஒரு பக்கம் ஒதுங்கிக் கொள்ளுங்கள் நாங்கள் விசாரணை நடாத்தி இனப்படு கொலை நடைபெற்றதற்கான ஆதாரங்களை தகவல்களை திரட்டி எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் இடம்பெற்ற தாக்குதல்கள் படுகொலைகள் தொடர்பில் தகவல்களை சேகரித்து நாங்கள் நிரூபித்து காட்டுகிறோம்.என்றார். 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026