வடக்கில் விளையாட்டுக் கழகம் மாவீரர்களுக்கு அஞ்சலி
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக்கழக பொது மண்டபத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன.
ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த மாவீரர்களுக்கும், ஏனைய மாவீரர்கள் மற்றும் மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர் கொடுத்த வீர மறவர்களை நினைவேந்தி பொதுப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மாவீரர் திருவுருவப்படங்களிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுச்சுடர் ஏற்றி நினைவேந்தப்பட்டது.
வீர மரணம் கண்ட மாவீரர்களை கண்ணீரோடு மக்கள் அஞ்சலித்தனர் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் துயிலும் இல்லம் செல்ல முடியாத மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவர் பி.அலஸ்ரன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |