மடு திருவிழா தொடர்பில் வெளிவந்த தகவல்

church mannar madu
By Vanan Jun 28, 2021 01:31 PM GMT
Report

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடித்திருவிழா தொடர்பான இறுதிக்கூட்டம் இன்று திங்கட்கிழமை (28) மடுத்திருத்தலத்தின் புனித ஜோசப்வாஸ் தியான மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்காலாநிதி இம்மனுவல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, மடுத்திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், உட்பட சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மடுத்திருத்தலத்தில் வழமையாக இடம்பெறும் மடு அன்னையின் ஆடி மாத உற்சவம் ஆனி மாதம் 23ஆம் திகதி (23-06-2021) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு ஆடி மாதம் 2ஆம் திகதி (02-07-2021) திருவிழா திருப்பலி மருதமடு அன்னையின் திருச் சொரூப பவனியுடன் நிறைவுபெறும்.

குறித்த திருவிழாவில் சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றுச் செல்கின்றமை வழமை. ஆனால், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் அசாதாரண சூழ் நிலை காரணமாக நாட்டின் சுகாதார நடை முறை இறுக்கமாக பின் பற்றப்படும் நிலையில்,

குறித்த மருத மடு அன்னையின் ஆடி உற்சவம் தொடர்பாக இரண்டு கூட்டங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற நிலையில், இறுதித் திர்மானத்தை முன்னெடுக்கும் கூட்டத்தில் குறித்த திருவிழாவிற்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுவது ஆலோசனைகளின் அடிப்படையில் இறுதித் தீர்மானமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்ட யாத்திரிகர்கள் மடுத்திருவிழாவிற்கு வருவது தவிர்க்கப்படுள்ளதுடன் மடுத்திருத்தலத்தின் இரண்டு பிரதான பாதை ஊடாக மட்டும் அனுமதிக்கப்பட்டவர்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளதோடு, தேவையின் நிமித்தம் மற்றும் உள் வருகின்றவர்களுக்கு அன்டிஜன் பிரிசோதனை முன்னெடுக்கப்படுவதுடன் சுகாதார நடைமுறை இறுக்கமாக பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருவிழா திருப்பலி எதிர்வரும் 2 ஆம் திகதி ஆயர் தலைமையில் காலை 6.15 மணிக்கும் ஒப்புக் கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து 6 திருப்பலிகள் குறிக்கப்பட்ட நேரத்தில் இடம் பெறுவதுடன் ஒரு திருப்பலியில் சுமார் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்டோர் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த திருப்பலிகளில் மன்னார் மறைமாவட்டத்தின் பங்குகளில் இருந்து தீர்மானிக்கப்பட்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதுடன் மன்னார் மாவட்டத்தில் நோய் தொற்றோடு இனம் காணப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மடுத்திருத்தலத்திற்குள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் திருத்தலத்தின் ஆடித்திருவிழா வழமை போன்று இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக நாட்டு மக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகப்பதற்கான விசேட வேண்டுதல் செபம் உருக்கமாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020