வெனிசுலா ஜனாதிபதி கைது : ட்ரம்பிற்கு உள்ளிருந்தே கிளம்பும் எதிர்ப்பு
வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்த அமெரிக்கா நியுயோர்க் சிறையில் அடைத்துள்ளது.
ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு நியுயோர்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தான் ட்ரம்ப் உடன் நேரடியாக தொடர்புகொண்டு பேசியதாக மாம்தானி பேட்டியில் தெரிவித்தார். அவர் கூறியதாவது,
இறையாண்மை கொண்ட நாட்டின் மீது தாக்குதல்
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் நடவடிக்கை. இது அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டங்களுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது.

இந்தத் தாக்குதல் வெளிநாடுகளில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது, நியுயோர்க் நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டு மக்களையும் நேரடியாகப் பாதிக்கும்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது நிர்வாகத்தின் முக்கிய நோக்கம் " என்று தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |