பசிலின் நாடாளுமன்ற வருகையில் பின்னடிப்பு! முடிவில்லை என்கிறார் மஹிந்த
basil
mahinda
parliament
member
slpp
By Vanan
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் தினமும் ஒவ்வொரு திகதிகளை பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகைக்காக தெரிவித்து வருகின்றனர்.
எனினும் அவர் நாடாளுமன்றம் வருவதற்கான இறுதித் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விலகிய பின்னரே அதற்கான வாய்ப்பு உள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இதுகுறித்து பசில் ராஜபக்ஷவுடன் அடுத்த வாரத்தில் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் மஹிந்த கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி