ஜனாதிபதி காலத்தில் மகிந்தவிற்கு ஏற்பட்ட அச்சம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், காகங்களை கண்டு அச்சமடைந்தமை தற்போது தெரியவந்துள்ளது.
அவர் நடைபயிற்சியில் ஈடுபடும் பாதையில் காகத்தின் எச்சங்களை அகற்றிச் சுத்தம் செய்யும் பணி இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது என பேராசிரியர் சரத் கொடகம தெரிவித்துள்ளார்.
ஹுனுபிட்டிய கங்காராமைக்கு அருகிலுள்ள நடைபயிற்சி பாதையின் இருபுறமும் உள்ள பெரிய மரங்களை வெட்டி அகற்றுவது குறித்து பாதுகாப்புப் படையினர் தன்னிடம் ஆலோசனை கேட்டதாக பேராசிரியர் சரத் கொடகம வெளிப்படுத்தினார்.
மகிந்த ராஜபக்சவின் உடற்பயிற்சிக்கு இடையூறு
அந்த மரங்களில் தங்கும் காகங்கள் எச்சமிடுவதால் ஏற்படும் நிலைமை, அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடற்பயிற்சிக்கு இடையூறாக அமைந்ததே இதற்குக் காரணமாகும்.

எனினும், அந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்குப் பதிலாகத் தனது தலையீட்டின் மூலம் காகங்கள் அமரும் கிளைகளை மட்டும் அகற்றி மரங்களைப் பாதுகாக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஷிரான் பாஸிக்கிற்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி....! சட்டமா அதிபருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |