மகிந்த மற்றும் சரத்பொன்சேகா நீண்ட நேரம் தனித்து பேச்சு - சஜித் அணியிலிருந்து கழர திட்டமா?
srilanka
mahinda
sarathfonseka
By Vasanth
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நீண்ட நேரம் பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான திலிப் வெதஆராச்சியின் மகளது திருமணம் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாஸ, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்விலேயே பிரதமர் மஹிந்தவுடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நீண்டநேரம் பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.