வெள்ளத்தில் மூழ்கிய வைத்தியசாலையொன்றின் சேவை நாளை ஆரம்பம்
வெள்ளத்தில் மூழ்கிய மஹியங்கனை ஆதார மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இராணுவத்தினரும் இதில் ஈடுபட்டுள்ளதாகவும், மகாவலி ஆற்றின் அருகே அமைந்துள்ளதால், மருத்துவமனைக்குள் அதிக அளவு சேறு படிந்துள்ளதாகவும், இதனால் துப்புரவு பணிகள் மிகவும் கடினமாக உள்ளதாகவும் செயலாளர் கூறினார்.
முழுமையாக மீண்டும் தொடங்க நடவடிக்கை
இருப்பினும், நாளை (03) வெளிநோயாளர் பிரிவுகள், முதன்மை பராமரிப்பு மற்றும் அவசர சேவைகள் முழுமையாக மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறப்பு மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

பேரழிவின் போது மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மருந்துவழங்கல் நிலையம் சேதம்
வெள்ளத்தால் மருத்துவமனையில் உள்ள மருந்துவழங்கல் நிலையம் சேதமடைந்துள்ளதாகவும், சில மருந்துகள் அழிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிததார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |