அரசில் இணைய அதிபர் பதவியை குறி வைக்கிறார் மைத்திரி
Colombo
Srilanka Freedom Party
Maithripala Sirisena
By Sumithiran
தனக்கு அதிபர் பதவி தந்தால் அரசில் இணைந்துகொள்வதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அரசில் இணைந்து கொள்ளப்போகிறீர்காளா என ஊடகவியலாளர்கள் வினவியபோது அதற்கு பதில் அளித்த அவர் இதனை குறிப்பிட்டார்.
பிளவுகள் ஏற்படுவது சகஜம்

பிரதமர் பதவியையோ, அரசின் அமைச்சர் பதவியையோ பெற வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், அரசியல் கட்சிகளில் பிளவுகள் ஏற்படுவது சகஜம், அவை இன்று இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானது என அவர் குறிப்பிட்டார்.