மலையக தியாகிகள் தினம் நுவரெலியாவில் அனுஷ்டிப்பு
Sri Lanka Upcountry People
Sri Lankan Tamils
Nuwara Eliya
Sri Lankan Peoples
By Independent Writer
Courtesy: நிருபர் எஸ்.தியாகு
மலையக தியாகிகள் தினம் நுவரெலியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.
நுவரெலியா நகர மத்தியில் கவிதாஸ் சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மலையக தியாகிகள் திடலுக்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் இன்றுசனிக்கிழமை (10.01) காலை 9.30 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.
முதலாவது மலையக தியாகி
இதன்போது, முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

1940 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி சம்பள போராட்டத்திற்காக உயிர் நீத்த முல்லோயா கோவிந்தன் முதலாவது மலையக தியாகியாக இந்த நினைவுத்தூபியில் பெயர் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி