மலேசியாவில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தம்பதியினர்
Sri Lanka
Sri Lankan Peoples
Malaysia
World
By Dhilak
மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இவர்களது வீட்டிற்கு அருகில் அவர்கள் ஓட்டிச் சென்ற மகிழுந்து மற்றுமொரு மகிழுந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் போது அவர்களது சிறிய மகளும் மகிழுந்தில் இருந்தாகவும் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மென்பொருள் பொறியியலாளர்கள்
இந்நிலையில், விபத்தின் போது மலேசியாவில் பணியாற்றிய மென்பொருள் பொறியியலாளர்கள் இருவரே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த பெண்ணுக்கு 33 வயது மற்றும் அவரது கணவருக்கு 35 வயது என கூறப்படுகிறது.
அத்தோடு அவர்களின் பூதவுடல்கள் இலங்கைக்கு கொண்டவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.