மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை இலக்குவைத்து குண்டுத்தாக்குதல்
injured
maldives
bombblast
nazeer ahemed
By Sumithiran
மாலைதீவின் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகர், முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத்தை இலக்கு வைத்து இன்றிரவு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார்.
அவரது இல்லமான கனேரிஜ் - க்கு வெளியே நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலிலேயே அவர் காயமடைந்துள்ளார்.
நஷீத் தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறமுற்பட்டபோதே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அவசர சிகிச்சைக்காக நஷீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த வெடிப்பின் விளைவாக அவரது மெய்க்காப்பாளருக்கும், பார்வையாளருக்கும் காயம் ஏற்பட்டது. அவர் ஒரு வெளிநாட்டு நாட்டவர் என அடையாளம் காணப்பட்டார்.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்