வீழ்ச்சியடைந்துள்ள மாலைதீவின் பொருளாதாரம்: இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
மாலைதீவுக்கு( Maldives) வருமாறும், தங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆதரவு தருமாறும் மாலைதீவு சுற்றுலாத்துறை அமைச்சரான இப்ராஹிம் ஃபைசல்,(Ibrahim Faisal) இந்தியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்தியாவுக்கும்(India) மாலைதீவுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுற்றுலா மூலம் தங்கள் நாட்டுக்கு வரும் வருவாய் குறைந்துள்ளதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மாலைதீவு முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டதோடு சீனா ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.
மாலைதீவு சுற்றுலா
இவர் தனது தேர்தல் பிரசாரத்திலேயே தான் வென்றால் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்றுவேன் என்று கூறி பிரசாரம் செய்து வாகை சூடினார்.
அதேபோல் வெற்றி பெற்ற அவர் அங்குள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேறும்படி கூறினார். இது விவாதத்தை கிளப்பியது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடி லட்சதீவுக்கு சென்று புகைப்படம் வெளியிட்டார்.
மாலைதீவின் சுற்றுலா துறையை முடக்கும் வகையில் உள்நோக்கத்துடன் லட்சத்தீவை பிரதமர் மோடி ஆதரிப்பதாக அந்நாட்டு அமைச்சர்கள் கூறியதோடு இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளையும் தெரிவித்தனர்.
உறவில் விரிசல்
இது இந்தியா-மாலைதீவு இடையேயான பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தியது. இதனால் கடும் கோபமடைந்த இந்தியர்கள் மாலைதீவு செல்வதற்கான டிக்கெட்டுகளை இரத்து செய்தனர்.
இதனால் மாலைதீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனால், மாலைதீவு சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.
இந்நிலையில், நேற்று வெளியான ஆய்வு ஒன்றின் முடிவுகளின் படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாலைதீவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 42 சதவிகிதம் குறைந்துள்ளது.
அமைச்சரின் கோரிக்கை
மே 4 நிலவரப்படி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 73,785 இந்தியர்கள் மாலைதீவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 43,991ஆக குறைந்துள்ளதாக சுற்றுலாத்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து மாலைதீவு சுற்றுலாத்துறை அமைச்சரான இப்ராஹிம் ஃபைசல், மாலைதீவுக்கு வருமாறும், தங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆதரவு தருமாறும் இந்தியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சமூக ஊடகமான எக்ஸில் வெளியாகியுள்ள காணொளியொன்றில், மாலைதீவு சுற்றுலாத்துறை அமைச்சரான இப்ராஹிம் ஃபைசல், நம் இரு நாடுகளுக்கும் என ஒரு வரலாறு உள்ளது.
பொருளாதாரம்
எங்கள் நாடு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. நாங்கள் எங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு நல் வரவேற்பை அளிப்போம்.
VIDEO | Here’s what Tourism Minister of Maldives Ibrahim Faisal said on India-Maldives relations.
— Press Trust of India (@PTI_News) May 6, 2024
“We have a history. Our newly elected government also wants to work together (with India). We always promote peace and a friendly environment. Our people and the government will… pic.twitter.com/xFgEkgEunv
சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற முறையில், மாலைதீவின் சுற்றுலாவில் தயவு செய்து பங்கு வகிக்குமாறு நான் இந்தியர்களைக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் பொருளாதாரம், சுற்றுலாவைத்தான் நம்பி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |