தலவாக்கலையில் மின்னல் தாக்கி நபரொருவர் பரிதாபமாக பலி
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Pavi
தலவாக்கலை காவல் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (03.10.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் தலவாக்கலை பாமஸ்டன் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பிரமணியம் தேவகுமார் என தெரிவிக்கபட்டுள்ளது.
பொது வைத்தியசாலை
இது குறித்து தெரியவருகையில் இன்று பிற்பகல் தலவாக்கலை பாமஸ்டன் தோட்டப் பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

இதன்போது, வீடு ஒன்றில் நான்கு பேர் ஒன்றாக இருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில், இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தலவாக்கலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்