யாழில் தரமற்ற உணவை உற்பத்தி செய்தவருக்கு 6 மாத கால சிறை
யாழ். பருத்தித்துறையில் தரமற்ற உணவை உற்பத்தி செய்தவருக்கு 6 மாத கால சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட வியாபார நிலையம் ஒன்றின் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருகையில்,
6 மாத கால சிறை
பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட வியாபார நிலையம் ஒன்றில் கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் செய்தனை நடவடிக்கையின் போது, பாணிப்பனாட்டு மாதிரிகள் பெறப்பட்டு அதனுடைய தரம் தொடர்பாக பகுப்பாய்வு செய்வதற்கு அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட பாணிப்பனாட்டு தரமற்றதும் எனவும், மண் மற்றும் வெளிப்பொருட்களால் பாதிக்கப்பட்டதும் மனித நுகர்விற்கு ஏற்றதல்லதும் என பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றது.
அதனை அடுத்து உணவுப்பொருளினை உற்பத்தி செய்த உரிமையாளருக்கும் அதனை விநியோகம் செய்த விநியோகஸ்தருக்கு எதிராகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, குறித்த உணவுப்பொருளினை உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் விநியோகஸ்தருக்கு 8000 தண்டப்பணம் அறவிடப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |