மட்டக்களப்பில் நீர் குழியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு - வெல்லாவெளி காவல்துறை பிரிவில் உள்ள காந்திபுரம் பகுதியின் நீர் குழி ஒன்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது, இன்று (29)பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, உயிரிழந்த நபர் போரதீவுப்பற்று காந்திபுரம் கிராமத்தை சேர்ந்த 65 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான முருகேசு சிவபாதம் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் விசாரணை
இது குறித்து மேலும் தெரிய வருகையில்
வாழைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக தோண்டப்பட்டுள்ள குழியில் நபர் ஒருவரின் சடலத்தை அவதானித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குற்றத் தடயவியல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் வெல்லாவெளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |