கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடொன்றுக்கு தப்பிச் செல்ல முயன்றவர் கைது
200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் சிறிலங்கா(sri lanka) கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் கடற்றொழில் கப்பலின் உரிமையாளர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மாலைதீவுக்கு(maldives) தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, கடைசி பாதுகாப்பு வேலியை கடந்து செல்லவிருந்த நிலையில் அவரை கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர் வர்த்தகர்
இவர் நீர்கொழும்பில் வசிக்கும் 38 வயதான வர்த்தகர் ஆவார். நேற்று (25ம் திகதி) இரவு 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு செல்வதற்கு தயாராக இருந்த எமிரேட்ஸ் விமான சேவையின் EK-653 விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட வர்த்தகர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |