போதைப்பொருளுக்கு எதிராக வவுனியா இளைஞரின் முயற்சி
வவுனியவை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளுக்கெதிரான நடைபயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
வவுனியா (Vavuniya) சமயபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் போதையில் இருந்து இளம் சந்ததியை காப்பாற்றுவோம் என்ற தொனிப் பொருளோடு நேற்று (03) இந்த நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளார் .
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து ஒரு வருடமாக சிகிச்சை பெற்ற ரொஷான் என்கின்ற இளைஞரே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரித்து வரும் போதைப்பொருள்
இந்நிலையில், அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் ஊடாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களில் இருந்து எதிர்கால சந்ததியை பாதுகாக்க கோருவதே குறித்த நடைபயணத்தின் நோக்கமென அவர் கூறியுள்ளார்.
இதன்போது, இளைஞர், வவுனியா நகரத்தின் மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்து நேற்று மாலை முல்லைத்தீவு (Mullaitivu) நகரை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இன்று (04) முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வழியாக ஓமந்தையை சென்றடைந்து நடைபவனி நிறைவடையும் என குறித்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |