முன்னாள் அமைச்சர்களுக்கு பேரிடி! அனைத்தையும் கக்கும் சம்பத் மனம்பேரி
போதைப்பொருள் கொள்கலன்கள் குறித்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரி முன்னாள் அமைச்சர்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கு வடக்கு குற்றப்பிரிவின் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட நீண்ட விசாரணைகளில் இது தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, ஐஸ் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெக்கோ சமனின் அறிவுறுத்தல்
அத்துடன் விசாரணையில், வட்ஸ்அப்பில் பெக்கோ சமனின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு கொள்கலன்களையும் தனது சகோதரர் பியல் மனம்பேரியின் உதவியுடன் மித்தெனிய பகுதிக்கு கொண்டு சென்றதாகவும் அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
மேலும், கொள்கலன்கள் தொடர்புடைய ஆவணங்களை பெக்கோ சமன் வாட்ஸ்அப் மூலம் சம்பத் மனம்பேரிக்கு அனுப்பியும் உள்ளார்.
கெஹல்பத்தர பத்மே, பெக்கோ சமன் உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பிறகு, பயத்தில் அவற்றை நிலத்தில் புதைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சம்பத் மனம்பேரி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்கள் சுங்கத்தால் பரிசோதிக்கப்பட்டவை! ஜப்பானில் அநுர விளக்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
