கடல்வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த மன்னார் இளைஞர்கள் கைது -தீவிர விசாரணையில் அதிகாரிகள்

srilanka mannar tamil nadu
By Vasanth Apr 04, 2021 07:54 AM GMT
Report

இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் க்யூ பிரிவு மற்றும் மத்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு கண்ணாடி இழை படகு மூலம் இலங்கையைச் சேர்ந்த இருவர் சட்ட விரோதமான முறையில் வந்து இறங்கியதாக இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்து ராமேஸ்வரம் கடலோர காவல் குழும காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர்கள் மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் நாதேஸ் என தெரிய வந்தது.

இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஒருவர் வேலை தருவதாக கூறிய தங்களை தமிழகத்திற்கு வரவழைத்ததாக விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த மெரைன் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்கு சட்ட விரோதமாக நுழைந்த மன்னாரைச் சேர்ந்த குறித்த இரண்டு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் க்யூ பிரிவு மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக 2 இளைஞர்கள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தது பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016