பாரியளவில் பிரித்தானியாவிற்கு குடிபெயரும் அமெரிக்கர்கள் - அதிர்ச்சித் தகவல்
பிரித்தானிய (United Kingdom) குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றதிலிருந்து பிரித்தானிய குடியுரிமை பெறுவது தொடர்பில் இணையத்தில் தேடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் இதுவரையில் இல்லாத வகையில், அதிகளவிலான அமெரிக்கர்கள் குடியுரிமை பெற விருப்பம் தெரிவித்ததாக பிரித்தானியா உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்காலிக விசா
மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு இடையில் மட்டும் 1,900 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் பெறப்பட்டதாக பிரிட்டன் அரசு தெரிவித்தது.
பிரித்தானியாவில் மனைவி, பெற்றோர், குடும்பத்தினரைக் காரணமாகக் கொண்டு தான் பெரும்பாலானோர் குடியேறிய விரும்பியதாகவும் தொழிலாளர்களுக்கான தற்காலிக விசாக்களுடன் பிரித்தானியாவில் குடியேற சிலர் விரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்ப்பின் ஆட்சியால் தான் அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடியேற முயல்வதாக சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு 17 நிமிடங்கள் முன்
