மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பலர் கைது! மேலதிக நடவடிக்கை குறித்து நாடாளுமன்றில் விளக்கம்
தடை செய்யப்பட்ட அமைப்புகளைப் பிரதிபலிக்கும் வகையிலான பாடல்கள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெறவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது காவல்துறை உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் காவல்துறையின் செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மெனிக் பார்ம் அகதி முகாமிலிருந்த சிறுமி மீதான அத்துமீறல்: இந்து மதகுருவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
வெளியிடப்பட்ட வர்த்தமானி
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பதற்கோ அல்லது மீள உருவாக்குவதற்கோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமது பிள்ளைகள், பெற்றோர் மற்றும் உறவினர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதற்கு நாட்டின் எப்பாகத்திலும் வாழும் மக்களுக்கு உரிமை உண்டு. அதில் எவ்விதத் தடையுமில்லை.
எனினும், 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னங்கள், கொடிகள், சீருடைகள் மற்றும் புகைப்படங்களைப் பகிரங்கமாகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
மேலதிக சட்ட நடவடிக்கை
நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றிச் சுயாதீனமாகச் செயற்படுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளைப் பிரதிபலிக்கும் வகையிலான பாடல்கள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கோ அல்லது இன நல்லிணக்கத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்தும் எத்தகைய செயற்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது” என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |