வாகனங்களில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!.. (காணொளி)
Corona
Warning
People
Mask
SriLanka
Omicron
By Chanakyan
வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் பயணித்த 8,394 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்கள் தொடர்பில் நேற்று 778 போக்குவரத்து காவல்துறையினர் மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது முறையாக முகக்கவசம் அணியாத 2,363 பேருக்கு காவல்துறையினரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முகக்கவசம் அணியாமல் பயணிக்கின்றமையால் இலகுவாக தொற்றுக்குள்ளாகக் கூடும். எனவே முகக்கவசம் அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டாம் என்று காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற செய்திகளுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்