தையிட்டியில் வெடித்த மாபெரும் போராட்டம் : குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்
புதிய இணைப்பு
தையிட்டி போராட்டத்தில் பங்கேற்போர் தொடர்பில் காவல்துறையினர் பெற்றுக்கொண்ட நீதிமன்ற தடையுத்தரவை ஒலிபெருக்கியில் வாசித்தனர்.
குறித்த தடையுத்தரவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலன் சுவாமிகள், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட சில நபர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு கட்டளையும் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான நில மீட்பு உரிமைப் போராட்டம் சற்றுமுன்னர் தையிட்டி விகாரை முன்றலில் ஆரம்பமாகியுள்ளது.
போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு ஏராளமாான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தையிட்டி விகாரையில் இன்றைய தினம் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள் - த.பிரதீபன்
முதலாம் இணைப்பு
தையிட்டி விகாரைக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (03) காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தையிட்டி கலைவாணி வீதிக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான ஒலி என்ற தொனியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |