காசா நிலவரம்: ரியாத்-அல்-மாலிகியுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு
ஜேர்மனி நடைபெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் காசா பகுதியின் நிலவரம் குறித்து பலஸ்தீன வெளியுறவு அமைச்சா் ரியாத்-அல்-மாலிகியுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஜேர்மனி நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டுத் தலைவா்களை அவா் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார்.
அதன்போது, இருதரப்பு உறவுகள், மேற்கு ஆசியா சூழ்நிலை மற்றும் பலதரப்பட்ட உலகுக்கான சீா்திருத்தம் மேற்கொள்வது உள்பட முக்கிய சா்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
காசா நிலவரம்
இந்நிலையில், பலஸ்தீன வெளியுறவு அமைச்சா் ரியாத்-அல்-மாலிகியை சந்தித்து இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், பலஸ்தீன வெளியுறவு அமைச்சா் ரியாத்-அல்-மாலிகியை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருடன் காசா நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
