புதிய வடக்கு ஆளுநரின் களவிஜயம்!
                    
                police
            
                    
                jaffna
            
                    
                governor
            
                    
                nothern province
            
            
        
            
                
                By Kalaimathy
            
            
                
                
            
        
    வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியாகராஜா முப்படையினர் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து வடமாகாணத்தின் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு இன்று காலை சென்ற ஆளுநர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பில் ஈடுபட்டார். வட மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது.
இதன்போது வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ஜகத் பளிகக்கார ,யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த லியனகே, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர்கள், கடற்படை, விமானப் படை, இராணுவ அதிகாரிகளுடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
 
                                        
                                                                                                                         
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        