மட்டக்களப்பு கண்ணகி அம்மன் ஆலய வாவியில் மிதந்துவந்த ஆணின் சடலம்!
srilanka
batticaloa
death
men
By Vasanth
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றுக்கமைய பொலிஸாரால் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி