ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை : அமெரிக்காவிலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக தரைவழிப் படையெடுப்பு இல்லாமலேயே அனைத்து நோக்கங்களையும் அடைய முடியும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.
சில வாரங்களிலேயே முடிவுக்கு வரும்
பிரான்சில் நடைபெற்ற 'ஜி7' தூதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது மார்கோ ரூபியோ இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை மாதங்களில் அல்ல, சில வாரங்களிலேயே முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக ரூபியோ மேலும் கூறினார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு வரி
இதற்கிடையில், போர் முடிவடைந்த பின்னரும் கூட, ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் கடற்படைக் கட்டணங்களை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜி7 பிரதிநிதிகள் அவருடன் கலந்துரையாடி உள்ளனர்.

ஹோர்முஸ் வழியாக வர்த்தகம் செய்வதால் பயனடையும் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு தடையற்ற பாதையை உறுதி செய்வதற்காக, அமெரிக்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்