கொழும்பில் பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!
Sri Lanka Police
Colombo
Drugs
By Laksi
கொழும்பில் பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முகத்துவாரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் இருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 7 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போதைப்பொருட்கள் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானது என முகத்துவாரம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் தயாரிப்பு
இதன்போது போதைப்பொருள் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களையும், அவற்றை பதப்படுத்த பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இயந்திரத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்