செம்மணி புதைகுழி நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்த பிரதி அமைச்சர்
செம்மணி மனிதப் புதைகுழி அவலங்கள் தொடர்பான சிங்கள நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்த தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் (Muneer Mulaffer) எவ்வித அறிவித்தலும் வழங்காமல் புறக்கணித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழி அவலங்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்த தரிந்து ஜயவர்தன (Tharindu Jayawardhana) மற்றும் தரிந்து உடுவேகெதர, எம்.எப்.எம்.பஷீர் ஆகியோர் இணைந்த சிங்கள மொழியில் வெளியிட்ட 'செம்மணி' என்ற நூல் நேற்று (14) வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்தநிகழ்வு நுலகம் மற்றும் ஆவணவாக்கல் சபை மண்டபத்தில் நேற்று (14) மாலை 2.30 மணிக்கு நடைபெற்றது.
புறக்கணித்த பிரதி அமைச்சர்
நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பல பிரபலங்கள் அழைக்கப்பட்டிருந்த போதும், அவர்கள் அனைவரும் வருகைத் தந்திருந்த நிலையில் சிறுபான்மையின பிரதியமைச்சராகவும் தேசிய ஒருமைப்பாடுக்கு பொறுப்பானவர் என்ற வகையில் அவரின் பிரசன்னம் எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதும் அவர் எதுவும் சொல்லாமல் நிகழ்வுக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய நூலை எழுதியவர்களில் ஒருவரான தரிந்து ஜயவர்தன பிரதியமைச்சர் நிகழ்விற்கு வராததை விமர்சித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.

யாழ். போதனாக்கு பேரிழப்பு - சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு சத்தியமூர்த்தி இரங்கல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்
