சர்ச்சைக்குள்ளாகிய பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்!
Anura Dissanayake
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Ministry Of Public Security
By Dilakshan
இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆபாச கருத்துக்களை கொண்ட ஒரு பிரிவு காட்டப்படுகின்றமை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் இன்றையதினம் (24) சமூக ஊடகங்கள் மூலமாக பரவி வருகிறது.
அதன்படி, பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் அமைச்சகச் செயலாளர் தொடர்பான அமைச்சகத் தகவல்களைக் காண்பிக்கும் ஒரு பிரிவின் கீழ் ஆபாசமான மற்றும் பொருத்தமற்ற மொழிநடையுடைய வார்த்தை பிரயோகங்கள் காணப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிக்கை
இவ்வாறான பொருத்தமற்ற மொழிநடை காணப்படுவதானது, வேறு ஒரு தரப்பினரால் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் எவரும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி