திருமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது திருகோணமலை (Trincomalee) மாவட்ட சங்கத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, மனித உரிமைகள் சங்க அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அவர்களது உறவுகள் 16 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக போராடி வருகின்றர்.
அரசின் மீது நம்பிக்கை
இன்று வரை இலங்கை (Sri Lanka) அரசாங்கத்திடமிருந்து தமது விடயத்தினை பொறுத்தவரையில் தீர்வு எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில் தமக்கு இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை என்பதனை இதன் போது வலியுறுத்தியிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பப்பட்டவர்களுக்கான அலுவலகமோ அதற்கான இழப்பீட்டையோ தாம் எதிர்பார்க்கவில்லை என வலியுறுத்தியதுடன், சர்வதேச விசாரணை ஒன்றே தேவை அதனூடாகவே ஒரு திட்டவட்டமான தீர்வினை பெறமுடியும் என்பதனை தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாக அரசிடம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், சர்வதேச சமூகத்தின் பார்வையில் தமது போராட்டம் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் தொடர்ச்சியான தமது தேடுதலுக்கான முடிவினை விரைவினில் பெற்றுத்தர சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |