காணாமல் போனோருக்கான அலுவலகம் உடனடியாக அகற்றப்படவேண்டும் - இல்லையேல்.... சிறிலங்கா நீதி அமைச்சருக்கு பகிரங்க எச்சரிக்கை!

Missing Persons Mannar Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka
By Kalaimathy Dec 21, 2022 11:31 AM GMT
Report

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது. கண்துடைப்புக்காக மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் எனவும் அவ்வாறு அகற்றவில்லையெனில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக இவ்வளவு காலமும் நீதி அமைச்சர் கூறி வருகிறார்.

எங்களுக்கு இந்த இழப்பீடு வேண்டாம் என்று நாங்கள் கூறி வந்தோம். காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும், பிள்ளைகளுமே எமக்கு வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகின்றோம்.

அரசாங்கத்திடம் ஒப்படைத்த பிள்ளைகள் எங்கே?

காணாமல் போனோருக்கான அலுவலகம் உடனடியாக அகற்றப்படவேண்டும் - இல்லையேல்.... சிறிலங்கா நீதி அமைச்சருக்கு பகிரங்க எச்சரிக்கை! | Missing Persons Justice Minister Omp Office Mannar

அரசாங்கத்திடம் பல தடவைகள் கதைத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இழப்பீட்டை வழங்கி எங்களை திசை திருப்ப பார்க்கின்றார்கள்.

இங்கே ஒன்றும் நடக்கவில்லை என்று காட்டும் வகையிலும் ஐ.நாவிற்கு தமது அறிக்கைகளை வழங்க காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு இழப்பீடு வழங்க முயற்சிக்கின்றனர்.

நாங்கள் இழப்பீட்டிற்காக இவ்வளவு காலமும் போராடவில்லை. எமது உறவுகளுக்காகவும், அத்தனை உயிர்களுக்காகவுமே நாங்கள் போராடி வருகிறோம். எமது பிள்ளைகளுக்கும், உறவுகளுக்கும் என்ன நடந்தது என்று முதலில் கூறுங்கள். அரசாங்கத்திடம் ஒப்படைத்த பிள்ளைகளையும், உறவுகளையுமே நாங்கள் கேட்கிறோம்.

அவர்களுக்கு என்ன நடந்தது என்றே கடந்த 15 வருடங்களாக கேட்டுக் கொண்டு இருக்கின்றோம். எமது உறவுகளை திருப்பி தாருங்கள் என்று கேட்கின்றோம்.

ஆனால் அதை பற்றி கதைக்கிறார்கள் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (ஓ.எம்.பி) பற்றி கதைக்கிறார்கள், நஷ்ட ஈடு பற்றி கதைக்கிறார்கள்.

எமது பிள்ளைகள் எங்கே?

காணாமல் போனோருக்கான அலுவலகம் உடனடியாக அகற்றப்படவேண்டும் - இல்லையேல்.... சிறிலங்கா நீதி அமைச்சருக்கு பகிரங்க எச்சரிக்கை! | Missing Persons Justice Minister Omp Office Mannar

மரண சான்றிதழ் வழங்குவதாக கூறுகிறார்கள். நாங்கள் எதையும் கேட்கவில்லை. எனது உறவுகளையும் பிள்ளைகளையுமே கேட்கின்றோம். சுமார் 2200 நாட்களாக மழைக்கும் வெயிலுக்கும் இடையில் நின்று போராடி வருகிறோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 148 பேர் இதுவரை மரணித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நஷ்ட ஈடு தருவதாக கூறுகிறார்கள்.

நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம். எங்களுக்கு நஷ்ட ஈடு தர நீதி அமைச்சருக்கு என்ன அருகதை உள்ளது? நீதியமைச்சர் மன்னார் பக்கம் வராமல் இருப்பது அவருக்கு நல்லது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது. கண் துடைப்புக்காக மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக மன்னாரில் இருந்து அகற்ற வேண்டும்.

அடித்து விரட்டப்படுவீர்கள்

காணாமல் போனோருக்கான அலுவலகம் உடனடியாக அகற்றப்படவேண்டும் - இல்லையேல்.... சிறிலங்கா நீதி அமைச்சருக்கு பகிரங்க எச்சரிக்கை! | Missing Persons Justice Minister Omp Office Mannar

அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். எங்களினால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.

சுமார் 2 ஆயிரம் நாட்களாக போராடுகின்ற எமக்கு அதை செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? எனவே இனி வரும் காலங்களில் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறுவதை நிறுத்துங்கள்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015