ராஜபக்சக்கள் மீதான பிடியில் அநுர அரசின் மிசன் யாது?
இலங்கையில் அண்மைய நாட்களில் ராஜபக்சக்களை சட்டத்தின் பிடியில் இறுக்குவது தொடர்பான பரபரப்பான செய்திகள் அடுத்தடுத்து வருகின்றன. அந்தவகையில் இன்று கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் சுகிஸ்வர பண்டார தூக்கப்பட்டுள்ளார்.
கோட்டாவை மையப்படுத்திய ஈஸ்டர் தாக்குதல் சதிகள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப சுகீஸ்வர பண்டாரவின் சூட்சுமங்கள் அண்மைய நாட்களில் வந்த நிலையில் இரண்டு சம்பளங்களை எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவையாவும் ஒருபுறத்தே பழைய மோசடிக்காரர்கள் வளையம் கட்டப்படுவதான தோற்றப்பாட்டை உருவாக்கிக்கொள்கிறது. ஆனால் மறுபுறத்தே இந்த வியூகத்தின் ஊடாக தம் மீதான பொருளாதார சுமையை ஆட்சித்தரப்பு பெரிதும் குறைக்கவில்லையென மக்களுக்கு உள்ள அதிருப்தியை மடைமாற்றம் செய்ய அரசாங்கம் முயல்வதான விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளன.
இவ்வாறான உள்ளுர் நிலவரங்களுடன் நேற்றிரவு பரிஸ் நகரில் அமெரிக்க அரசதலைவரி திடீரென அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்த தாளில் ஒப்பமிட்டு பிரான்ஸ் அரசாங்கத்துக்கே இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |