ஜீவன் தொண்டமான் - தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமிழக முதல் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பான அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல், மலையத்திற்கான புதிய பல்கலைக்கழகம் இந்திய நிதியுதவியில் அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பான கருத்துக்களும் இந்த சந்திப்பில் பரிமாறப்பட்டுள்ளன.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர் தொடர்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட நலத்த்திட்டங்களுக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராட்டுக்களை தெரிவித்திருந்ததாக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.