பாடசாலையின் தரங்களுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தறை தெலிஜ்ஜிவில ரோயல் கல்லூரியின் சில தரங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பலத்த மழை பாடசாலை மாணவர்கள் மற்றும் நாளாந்த வேலைகளுக்குச் செல்பவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மாத்தறை தெலிஜ்ஜிவில ரோயல் கல்லூரியின் தரம் 6, 7, 8, 9 மற்றும் உயர்தர வகுப்புகளுக்கு இன்று (13) விடுமுறை வழங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை
அத்துடன் தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு வழமைபோல் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ உள்ளிட்ட அண்மித்த பகுதிகளிலும், தெனியாய மற்றும் சிங்கராஜ வனப்பகுதி உள்ளிட்ட நில்வலா ஆற்றின் நீரேந்து பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வலா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்டுகின்றது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |