நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும் கல்வி உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya ) தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஆசிரியர் கலாசாலைகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களுக்கும் இந்த வருடத்துக்குள் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி வேளையில் சாமர சம்பத் தசநாயக்க எம்பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வழக்கு தாக்கல்
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், தேசியபாடசாலைகளிலிருந்து மேலதிகமாக காணப்படும் ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கும் மாகாண பாட சாலைகளில் மேலதிகமாக காணப்படும் ஆசிரியர்களை தேசிய பாடசாலைகளுக்கும் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
எனினும் நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அது நிறுத்தப்பட்டிருந்தது.
எனினும் பின்னர் கிடைத்த நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மீண்டும் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் இந்த வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும் கல்வி உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமர சூரிய தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
