15 வயதுச்சிறுமி விவகாரம்! தொடர்ந்து இடம்பெறும் பல கைதுகள்
corona
sri lanka
people
By Shalini
15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவத்தில் அடுத்தடுத்து பல கைதுகள் இடம்பெறுகின்றன.
அந்த வகையில், இரண்டு பெண்கள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவர்களில் பிரதேசசபை பிரதி தலைவர், தொழிலதிபர்கள் மற்றும் கப்பல் கெப்டனும் கைதாகி உள்ளனர்.
அத்துடன், குறித்த சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை பிரசுரித்த இணையத்தளத்தின் உரிமையாளரும் அதன் பணக் கட்டுப்பாட்டாளரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
43, 45 வயதான குறித்த நபர்கள் பாணந்துறை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி