மொரோக்கோ ஐ.எம்.எப் கூட்டத்தொடர் : இலங்கை கடன் மற்றும் ஆளுகை தொடர்பில் கவனம்

International Monetary Fund Sri Lanka Morocco
By Beulah Oct 13, 2023 12:52 AM GMT
Report

மொராக்கோ மராகேஷில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வருடாந்த கூட்டங்களுடன் 'இலங்கை: கடன் நிலைத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தத்திற்கான பாதைகள்' என்ற தலைப்பில் ஒரு தனிப்பட்ட அமர்வு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு 'பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தம் தொடர்பான இலங்கை சிவில் சமூக முன்முயற்சியுடன்' தொடர்புடைய நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கையை வழிநடத்துவதில் மேற்கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய முன்னுரிமைகள் குறித்து இந் நிகழ்வு கவனம் செலுத்தவுள்ளது.

கிளிநொச்சியில் இப்படியும் ஒரு சம்பவம் : நாயால் நீதிமன்ற படியேறிய குடும்பத்தினர்

கிளிநொச்சியில் இப்படியும் ஒரு சம்பவம் : நாயால் நீதிமன்ற படியேறிய குடும்பத்தினர்

முன்னுரிமைகள் 

  1. சிவில் சமூகம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கையில் நடத்தப்பட்ட சமீபத்திய நிர்வாக மதிப்பீடுகள்.
  2.  இலங்கையின் கடன் வெற்றிகரமான மற்றும் நிலையான மறுசீரமைப்பை அடைந்துகொள்வதில் IMF, அரசாங்கம் மற்றும் நாட்டின் கடன் வழங்குநர்கள் ஆகியோரின் பங்களிப்பு.

மொரோக்கோ ஐ.எம்.எப் கூட்டத்தொடர் : இலங்கை கடன் மற்றும் ஆளுகை தொடர்பில் கவனம் | Morocco Imf Sri Lanka

"இலங்கையின் ஊழல் எதிர்ப்பு நிலப்பரப்பில் சிவில் சமூக ஆளுகையை கண்டறியும் அறிக்கை" செப்டம்பர் நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. இது இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் இலங்கைக்கான 34 நிர்வாக சீர்திருத்த பரிந்துரைகளின் விரிவான தொகுப்பை உள்ளடக்கியுள்ளது.

செப்டெம்பர் மாத பிற்பகுதியில், ஆசியாவிலேயே முதன்முதலாக இலங்கை தொடர்பில் தனது ஆளுகை கண்டறியும் அறிக்கையை IMF வெளியிட்டது. இந்த இரண்டு நிர்வாக மதிப்பீடுகளும் சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கும் திறனைக் கொண்டுள்ளன.

கடன் நிர்வாகத்தில் முன்னேற்றங்கள் எவ்வாறு நாடுகளுக்கு தொடர்ச்சியாக வரும் கடன் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும் என்பதை இந்த நிகழ்வில் கலந்துரையாடப்படும்.

ஹமாஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் மரணம் : இஸ்ரேல் பிரதமர் சூளுரை

ஹமாஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் மரணம் : இஸ்ரேல் பிரதமர் சூளுரை

இலங்கையின் வெளிநாட்டு கடன்களை கணிசமாக குறைப்பதனூடாக எவ்வாறு இறுதியில் ஒட்டுமொத்த கடன் சுமையை குறைப்பது என்பது மற்றும், நாட்டின் கடுமையான கடன் நிலைப்புத்தன்மை இலக்குகளை அடைய அது எவ்வாறு உதவும் என்பது பற்றியும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர், வெரிட்டே ரிசர்ச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் நிறுவனத்தின் இலங்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதீஷானி பெரேரா மற்றும் குளோபல் ஸொவரின் அட்வைசரி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி ஆய்வாளர் தியோ மாரெட் ஆகியோர் உரையாற்றி கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர்.

தாம்சன் ராய்ட்டர்ஸ் எமர்ஜிங் மார்க்கெட்ஸின் நிருபரான ஜோர்ஜெலினா டோ ரொசாரியோ அவர்களால் இந்த அமர்வு வழிநடத்தப்படும்.

இத் தனிப்பட்ட நிகழ்விற்கு பிரத்தியேகமாக அழைக்கப்பட்டவர்களில் IMF சபையின் பல நிர்வாக பணிப்பாளர்கள், பலதரப்பு நிறுவனங்களின் பிராந்திய தலைவர்கள், பல முக்கிய பங்குதாரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் மற்றும் மராகேஷில் நடைபெறும் IMF இன் வருடாந்த கூட்டத்திற்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவின் உயர்மட்ட உறுப்பினர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இலங்கையர்களுக்கு ஜப்பானில் அடிக்கவுள்ள அதிஷ்டம் : ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையர்களுக்கு ஜப்பானில் அடிக்கவுள்ள அதிஷ்டம் : ஒப்பந்தம் கைச்சாத்து

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்