பொது இடமொன்றில் மருமகனின் தாக்குதலில் மாமியார் பலி
பொது இடமொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் தனது மாமியாரை மருமகன் அடித்தே கொன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வலப்பனை பிரதேசத்திலேயே இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், 59 வயதுடைய டப்ளியூ.ஜி.ரணசிங்க என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலருணவு பொருட்கள்

உலக உணவுத் திட்டத்தின் கீழ் முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் வறுமையை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன. அவ்விடத்தில், மகள், மருமகன், மாமி யார் ஆகிய மூவரும் வந்துள்ளனர்.
அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. அதன்போது,தான் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால், 27 வயதான மருமகன், மாமியாரை தாக்கியுள்ளார்.
உயிரிழந்தார் மாமியார்

சம்பவத்தில் அவ்விடத்திலேயே மாமியார் பலியானதுடன் சிறு காயங்களுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரேத பரிசோதணைக்காக ரிகலகஸ்கட பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்த தெரிப்பெய காவல்துறையினர் மருமகனை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.