ஹட்டன் பிரதான வீதியில் பாரிய மண் மேடு சரிவு: போக்குவரத்து முற்றிலும் தடை(படங்கள்)
மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியின் சென்ஜோன் டிலரி பகுதியில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (09) மாலை 05 மணியளவில் இடம் பெற்றதாக மேலும் தெரிவித்தனர்.
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் புணரமைப்பு பணிகள் இடம் பெற்று கொண்டிருக்கும் வேளையில் மலையகத்தில் தொடர்ச்சியாக மழைபெய்து வருகின்றது.
போக்குவரத்து தடை
இந் நிலையில் பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
வாகன சாரதிகளுக்கான மாற்று வழியினை பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் எதுவும் இல்லாததால் இந்த வீதியின் ஊடாக போக்கவரத்தினை மேற்கொள்ளும் வாகன சாரதிகளும் பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மண்சரிவு அபாயம் ஏற்பட்டு சுமார் பல மணித்தியாலங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரையிலும் சரிந்து விழுந்த மண்மேட்டினை அகற்றுவதற்கான நடவடிக்கையினை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளபட வில்லையென பயணிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |