நேருக்கு நேர் வாகனங்கள் மோதியதில் இடம்பெற்ற விபத்து!
accident
mullaitivu
puthukkudijiruppu
By Kalaimathy
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு 12 ம் கட்டை பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு 12 ம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நபர் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









1ம் ஆண்டு நினைவஞ்சலி