நீதவான் சரவணராஜா உயிர் அச்சுறுத்தலினாலேயே மதிப்பு வாய்ந்த பதவியை விட்டு விலகினார்: சிவஞானம் சுட்டிக்காட்டு

Mullaitivu Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Oct 01, 2023 08:55 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் சரவணராஜா தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த காரணத்தினாலேயே தமது மதிப்பு வாய்ந்த நீதவான் பதவியை விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, “ நீதவான் குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக விகாரை கட்டுமானம் இடம்பெறுவது பற்றிய தள ஆய்வுக்கவாகவே நீதிமன்ற அலுவலர்கள் சகிதம் அங்கு சென்றுள்ளார்.

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: விரைவில் ரணிலிடம் ஒப்படைக்கப்படவுள்ள அறிக்கை

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: விரைவில் ரணிலிடம் ஒப்படைக்கப்படவுள்ள அறிக்கை


நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்

ஆய்வுப்பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பொழுதே நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரா எதுவித அறிவித்தலோ, அழைப்போ, அனுமதியோ இல்லாமல் தமது பரிவாரங்களுடன் அங்கு பிரசன்னமாகியது மட்டுமன்றி நீதவானின் கடமைக்கு இடையூறு செய்யும் வகையில் அவருடன் வாதிட முயற்சி செய்கிறார்.

நீதவான் சரவணராஜா உயிர் அச்சுறுத்தலினாலேயே மதிப்பு வாய்ந்த பதவியை விட்டு விலகினார்: சிவஞானம் சுட்டிக்காட்டு | Mullai Teevu Judge Resignment Issue

இது நீதிமன்றத்தையும் நீதவானையும் அவமதிக்கும் செயலாகும். அதனை நீதவான் நிராகரித்த காரணத்தால் சரத் வீரசேகர ஆத்திரப்பட்ட நிலையிலேயே காணப்பட்டார்.

நீதிமன்ற செயற்பாடுகளில் வேற்று எவரும் தலையீடு செய்வது நீதிமன்ற நடைமுறைகளுக்கு மாறானது என்று தெரிந்து கொண்டே சரத் வீரசேகரா இவ்வாறு அடாவடித்தனமாக செயற்பட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் விகாரை : ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தது நீதிமன்றம்

தமிழர் பகுதியில் விகாரை : ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தது நீதிமன்றம்


உயிர் அச்சுறுத்தல்

இதன் போதே தமது ஆத்திரத்தை இவர் அங்கு வெளிப்படுத்தியது ஊடகங்கள் வெளிப்படுத்திய செய்தி. நாடாளுமன்ற அனுபவம் உள்ளவரும், பாதுகாப்புத் துறைசார் குழுவின் தலைவராக உள்ளவருமான சரத் வீரசேகரவின் அன்றைய செயற்பாடுகளே சரவணரராஜாவுக்கு தீவிர உயிர் அச்சுறுத்தலை தோற்றுவிப்பது இயல்பானதே. இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் இணைந்து இனவாதத்தைக் காட்டியிருந்தார்.

நீதவான் சரவணராஜா உயிர் அச்சுறுத்தலினாலேயே மதிப்பு வாய்ந்த பதவியை விட்டு விலகினார்: சிவஞானம் சுட்டிக்காட்டு | Mullai Teevu Judge Resignment Issue

இதற்கு மேலாக, நாடாளுமன்ற சிறப்புரிமையை கவசமாகப் பாவித்து சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் சரவணராஜாவுக்கு எதிராக ஆற்றிய உரை அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுவது உறுதிப்படுத்தியிருக்கக்கூடியது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற அடிப்படைக் கோட்பாட்டின் படி செயற்பட்ட நீதிவானைப் பாதுகாக்க வேண்டிய நீதியமைச்சரும் சபாநாயகரும் பொருத்தமான நடவடிக்கை எதனையும் எடுக்கவுமில்லை.

சிங்கள ஏகாதியத்தியம்

சபாநாயகர் ஒப்புக்கு ஒரு ஆலோசனையைத் தெரிவித்து விடயத்தை முடித்துக் கொண்டார். நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த வழிபாட்டு நிலையத்தை குருந்தூர்மலை பிக்கு மேற்கொண்ட நிர்மாண வேலைகள், அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் புத்தசாசன அமைச்சரின் வருகை, அவரது தனிப்பட்ட குடும்ப விடயங்களை விமர்சனம் செய்தமை எல்லாமே சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கும் என்பதை உணராதது மட்டுமன்றி, இவற்றை எல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததன் மூலம் இந்த நாட்டில் நீதி நிர்வாகம் இனவாதத்திற்குள்ளும் பௌத்த மதவாதத்திற்குள்ளும் சிக்கியுள்ளமை வெளிப்படையான விடயமாகும்.

நீதவான் சரவணராஜா உயிர் அச்சுறுத்தலினாலேயே மதிப்பு வாய்ந்த பதவியை விட்டு விலகினார்: சிவஞானம் சுட்டிக்காட்டு | Mullai Teevu Judge Resignment Issue

ஒரு நீதவானை அந்தப் பதவி சார்ந்து பார்க்காமல் தமிழன் என்று பார்த்து விமர்ச்சித்தையும் இரசித்துக் கொண்டது முழு அரசாங்கமும். வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம் இது. இந்த இலட்சணத்தில்தான் உள்ளகப் பொறிமுறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் சர்வதேச விசாரணை தேவையற்றது என்றும் சிங்கள ஏகாதியத்தியம் பேசிக்கொண்டிருக்கிறது.

எனவே சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சரத் வீரசேகர போன்றோரின் செயற்பாடுகள் பற்றி பூரணமாக விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

அதேநேரம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், வலிந்து காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்கப்பெறும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களுக்கு அமைய பன்னாட்டு பங்களிப்புடன் கூடிய விசாரணைகள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இங்குள்ள அனைத்து இராஜதந்திரிகளும் மானுட தர்மத்துடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்றுள்ளது. 

கொலை மிரட்டலால் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த நீதிபதி சரவணராஜா: கிளிநொச்சியில் போராட்டம் (படங்கள்)

கொலை மிரட்டலால் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த நீதிபதி சரவணராஜா: கிளிநொச்சியில் போராட்டம் (படங்கள்)

 

ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016