வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்! புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய புலனாய்வாளர்

Mullaitivu Sri Lanka SL Protest
By Shadhu Shanker Jul 31, 2024 11:45 AM GMT
Report

புதிய இணைப்பு

முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (31) காலை முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது சிவில் உடை தரித்த புலனாய்வாளர் ஒருவர் போராட்டகாரர்கள் அருகே சென்று புகைப்படம் எடுத்து இவ்விடத்தே என்ன வேலை இவ்விடத்திலிருந்து செல்லுமாறு கூறி துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்! புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய புலனாய்வாளர் | Mullaitivu Protest For Missing Persons

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டங்களை இராணுவத்தினர், காவல்துறையினர் , சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் போன்றோர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று போராட்டத்தில் பங்கேற்றவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சிவில் உடை தரித்த புலனாய்வாளரை துரத்திய போது மீண்டும் வீதியோரத்தில் நின்று புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாக செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்! புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய புலனாய்வாளர் | Mullaitivu Protest For Missing Persons

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்! புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய புலனாய்வாளர் | Mullaitivu Protest For Missing Persons

முதலாம் இணைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி கடந்த 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (31) காலை முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்துக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

யுத்தம் நிறைவடைந்த நாள் முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகைகளை அடகு வைத்த மக்களுக்கு சலுகை...! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நகைகளை அடகு வைத்த மக்களுக்கு சலுகை...! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கவனயீர்ப்பு போராட்டம்

இதன் ஒரு அங்கமாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்! புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய புலனாய்வாளர் | Mullaitivu Protest For Missing Persons

கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்? , omp ஒரு கண்துடைப்பு நாடகம், சர்வதேச விசாரணையே தேவை, இழப்பீடுகள் வேண்டாம், எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற பல கோசங்களையும், பதாகைகளையும் ஏந்தியவாறும் எங்கே எங்கே உறவுகள் எங்கே , வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் , போன்ற கோசங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு: உயர்ந்துள்ள பலி எண்ணிக்கை!

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு: உயர்ந்துள்ள பலி எண்ணிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019