இனவழிப்பு நினைவேந்தலில் ஒருங்கிணைவதற்கு Zoom ஊடாக விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தலை வீடுகளில் இருந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே இணைப்பு (Zoom) ஊடாக குறித்த நிகழ்வில் அனைவரும் இணைவோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இனவழிப்பு நினைவேந்தல் வீடுகளில் இருந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே இணைப்பு (Zoom) ஊடாக குறித்த நிகழ்வில் அனைவரும் இணைவோம். கீழுள்ள இணைப்பை அனைவருக்கு பகிர்ந்து இன்று செவ்வாய்கிழமை காலை 10.15 மணிக்கு இணைந்து கொள்ளுமாறு அழையுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து வட்ஸ்அப் குழுவிலும் பதிவிடுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தாயகத்தில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வை கொரோனா ஆபத்தினைக் கருத்திற்கொண்டு வீடுகளிலிருந்து அனைவரும் மு.ப 10.30 மணிக்கு சுடரேற்றி அஞ்சலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.ப 10.30 மணிக்கு வழமையாக முள்ளிவாய்க்காலில் பிரதான சுடரேற்றப்படும் நேரமாகும் ஆகவே அனைவரும் கீழுள்ள ZOOM LINK இல் இணைந்து கொள்ளவும். மு.ப 10.15 மணிக்கு கீழுள்ள இணைப்பில் இணையுங்கள். TNPF is inviting you to a scheduled Zoom meeting. Topic: முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் நினைவேந்தல் Time: May 18, 2021 10:00 AM SriLanka Time
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/85376314342
Meeting ID: 853 7631 4342
என்று அவ்வழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.