காலியில் இடம்பெற்ற கொலை: காவல்துறையினர் விசாரணை
காலியில் (Galle) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக ரத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில், காலி - ரத்கம, ரப்பனாதெனிய பகுதியில் வசிக்கும் 60 வயதுடைய குறித்த நபர் தேங்காய் வியாபாரி ஒருவர் என்பதுடன் இவர் வெளிநாட்டில் உள்ள தனது இளைய சகோதரியின் பூட்டப்பட்ட வீட்டிற்குச் சென்று தேங்காய் உரித்துக்கொண்டிருக்கும் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கொலைக்கான காரணம்
இந்தநிலையில், கொலை செய்யப்பட்டவரது சடலம் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |