மியன்மாரில் வெடித்த இராணுவ புரட்சி -தீவிரமாக கண்காணிக்கும் இலங்கை அரசு
srilanka
army
myanmar
By Vasanth
மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பில் இராணுவம் ஈடுபட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் யங்கூனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம், மியன்மாரில் உள்ள இலங்கையர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையருக்கும் உதவத் தயாராக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை மியன்மாரில் வன்முறை அல்லது கலவர சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி