திருகோணமலை 'Gun Site' இரகசிய சிறை சீல்! மர்ம நிலத்தடி சிறையின் மர்ம பின்னணி
திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள 'Gun Site' எனப்படும் நிலத்தடி இரகசிய சிறை வளாகத்தை முழுமையாக சீல் வைப்பதற்குக் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது திருகோணமலை கடற்படை தளத்தின் நிலத்தடியில் அமைந்திருந்த 12 அறைகளைக் கொண்ட ஒரு இரகசிய தடுப்பு முகாம் ஆகும்.
2008–2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் இந்த இடத்திற்கு நெருங்கிய தொடர்பிருப்பது விசாரணைகளில் தெரியவந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) நிபுணர் குழு 2015 இல் இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு சித்திரவதைகள் நடந்ததற்கான சான்றுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.
தற்போது இந்த இரகசிய சிறையில் உள்ள சான்றுகளைப் பாதுகாக்கும் நோக்கில், அதனை சீல் வைக்கும் நடவடிக்கைகளை CID மேற்கொண்டுள்ள நிலையில் இது குறித்து விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |