நல்லூர்க் கந்தனின் 21ஆம் நாள் மகோற்சவப் பெருவிழா : நேரலை
Jaffna
Nallur Kandaswamy Kovil
Festival
By Sathangani
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெறுகின்றது.
தொடர்ச்சியாக 25 நாட்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவப் பெருவிழாவின் 21ஆம் நாள் உற்சவம் இன்றாகும்.
இன்று நல்லூர் கந்தனுக்கு கஜவல்லி மகாவல்லி உற்சவம் காலை 6.45 இற்கு ஆரம்பமாகி விசேட ஆராதனைகள் வெகுசிறப்பாக இடம்பெறுகின்றது.
பெருந்திரளான பக்த அடியார்கள் சூழ முருகப் பெருமான் அழகிய மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை அழகிய அன்ன வாகனத்திலும் உள்வீதியுலா வருகின்ற அற்புதக் காட்சியைக் காண முடிகின்றது.
நல்லூர்க் கந்தனை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் நேரலையில் கண்டுகொள்ளுங்கள்.